புதன், 19 ஆகஸ்ட், 2015

Thinakkural epaper 19AUG2015 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/

இலங்கை : ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்

 இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது

ரனில் மீண்டும் பிரதமர் ஆனார்

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றதால், ரனில் மீண்டும் பிரதமர் ஆனார். இதன் மூலம் ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது.

கொழும்பு, ஆக.19-

இலங்கை பாராளுமன்றத்தில் 225 இடங்கள் உண்டு. இவற்றில் 196 இடங்கள் தேர்தல் மூலமும், மீதி 29 இடங்கள் தேர்தலில் கட்சிகள் பெறுகிற ஓட்டுகளின் விகிதாச்சார அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன.

விறுவிறுப்பான தேர்தல்

இதன்படி அங்கு நேற்று முன்தினம் 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 196 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவு செய்த 21 அரசியல் கட்சிகள் களம் இறங்கின. அவற்றின் சார்பில் மொத்தம் 6 ஆயிரத்து 151 வேட்பாளர்களும், சுயேச்சையாக 2 ஆயிரத்து 498 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. உடனடியாக ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ரனில் அணி வெற்றி

இந்த தேர்தலில் 113 இடங்களை பெறுகிற கட்சிதான் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், எந்தவொரு கட்சியும் அந்த தகுதியை பெற வில்லை.

எனினும் தனிப்பெரும் அணியாக ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணி தேர்தல் நடந்த 196 இடங்களில் 93 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. முன்னாள் அதிபர் ராஜபக்சே, தற்போதைய அதிபர் சிறிசேனா ஆகியோரின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி 83 இடங்களை கைப்பற்றியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழர்கள் பெருவாரியாக வாழ்கிற வட பகுதியில் 3 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி பெற்றது. இந்த அமைப்பு 14 இடங்களை கைப்பற்றி உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை பாராளுமன்ற தேர்தலில், தமிழ் மக்களின் குரலை இவர்கள் ஓங்கி ஒலிக்க வழி பிறந்துள்ளது.

இறுதி நிலவரம்

மொத்த இடங்கள் - 225

தேர்தல் நடந்தவை - 196

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி - 93

ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி - 83

தமிழ் தேசிய கூட்டமைப்பு- 14

ஜனதா விமுக்த பெரமுனா - 4

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 1

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1

விகிதாச்சாரம்

இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு 11 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 9 இடங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

இந்த இடங்களுடனும் சேர்த்து ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு மொத்தம் 104 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு 92 இடங்களும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 இடங்களும் கிடைக்கும்.

கட்சி தாவல்?

தனிப்பெரும்பான்மை பலம் பெற ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு இன்னும் 9 இடங்களே தேவை.

அதே நேரத்தில் ராஜபக்சே தலைமையிலான எதிர் அணியில் இருந்து 25 முதல் 40 எம்.பி.க்கள் வரை ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு தாவக்கூடும் என தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையில் கட்சிதாவல் தடைச்சட்டம் அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரனில் விக்ரம சிங்கே கருத்து

தேர்தல் வெற்றி குறித்து ரனில் விக்ரம சிங்கே கருத்து தெரிவிக்கையில், “நல்லாட்சிக்கு மக்கள் தந்த தீர்ப்பு இது. மக்களுக்காக இந்த வெற்றியை உறுதி செய்வதற்கு ஓய்வின்றி உழைத்த அனைத்து கட்சிகள், தனிபட்ட நபர்கள் என அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, “புதிய சகாப்தத்தின் சவால்களை எதிர்கொண்டு, நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். சவால்களை எதிர்கொள்வதற்கு நீங்கள் அனைவரும் எங்களுடன் கரம் கோர்க்க அழைப்பு விடுக்கிறேன்” என கூறினார்.

ராஜபக்சே கனவு தகர்ந்தது

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த ராஜபக்சே, இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடித்து விடலாம் என கனவு கண்டார். ஆனால் அந்த கனவு தகர்ந்து தவிடுபொடியாய் ஆகிவிட்டது.

இலங்கை தேர்தல் முடிவுகள் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராஜபக்சே, “பிரதமராகும் எனது கனவு கலைந்து விட்டது” என ஒப்புக்கொண்டார். மேலும், “நான் ஒப்புக்கொள்கிறேன். கடும் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்” என கூறினார்.

பதவி ஏற்பு

மீண்டும் பிரதமர் ஆகியுள்ள ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரான ரனில் விக்ரம சிங்கே, உடனடியாக நாட்டின் 15-வது பிரதமராக பதவி ஏற்பார், அவருக்கு அதிபர் மாளிகையில் நடக்கிற எளிய விழாவில் அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

மந்திரிகள் பின்னர் ஓரிரு நாளில் பதவி ஏற்பார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

சிறிசேனா தேசிய அரசுதான் அமைப்பார் என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் இந்த அரசில் சேரப்போவதில்லை, எதிர்க்கட்சி வரிசையில் நாங்கள் அமர்வோம் என ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி உறுப்பினர் உதய கம்மான் பிள்ளை தெரிவித்துள்ளார். ஆனால் சிறிசேனாவின் ஆதரவாளர்கள் ரனில் விக்ரம சிங்கேயின் மந்திரிசபையில் இடம் பெறுவார்கள் என மற்றொரு தகவல் கூறுகிறது.

புதிய பாராளுமன்றம்

புதிய பாராளுமன்றம் அடுத்த மாதம் 1-ந் தேதி கூடும் என கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 

============== தினத்தந்தி =========================

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

யாழ்ப்பாண மாவட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி

தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள கிளிநொச்சி, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை, உடுப்பிட்டி, சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், மானிப்பாய், வட்டுக் கோட்டை ஆகிய அனைத்துத் தொகுதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.




இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட 20 தொகுதிகளில், 14 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.



தற்போதைய தேர்தலில் அது குறைந்தபட்சம் 15 இடங்களை வெல்வது உறுதியாகிவிட்ட நிலையில், தேசியப் பட்டியலில் கிடைக்கக்கூடிய இடங்கள் இரண்டாக உயர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினரின் எண்ணிக்கை இந்த நாடாளுமன்றத்தில்16ஐத் தொடக்கூடும் என்று அந்தக் கட்சியின் தரப்பில் நம்பிக்கை நிலவுகிறது.

தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி,

யாழ். மாவட்டத்தில் 5 இடங்களும்,
வன்னி மாவட்டத்தில் 4 இடங்களும்,
திருகோணமலை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது.

இவை தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இடங்களும்
அம்பாறை மாவட்டத்தில் 1 இடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைப்பது உறுதியாகிவிட்டதாக பிபிசி தமிழோசையின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஆக மொத்தம் 14 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் வென்றால் அதற்கு தேசியப்பட்டியலில் குறைந்தது ஒரு இடம் கிடைக்கும் என்றும், அது சில வேளை இரண்டு இடங்களாக அதிகரிக்கலாம் என்றும் நமது செய்தியாளர் குறிப்புணர்த்துகிறார்.

உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாங்கிய ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு இந்தத் தேர்தலில் அதிகரித்திருப்பதாகவே இதுவரையிலான தேர்தல் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வென்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டு அளவுகோள்களின் கீழும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடமான தனது ஆதரவை தக்கவைத்துக்கொண்டது மட்டுமல்ல, அதிகரித்திருப்பதாகவுமே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.


--------thanks பிபிசி தமிழோசை

Thinakkural epaper 18AUG2015 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/






-------------
http://epaper.thinakkural.lk/

புதன், 5 ஆகஸ்ட், 2015

Unilever Kodaikanal கொடைக்கானல் பாதரச கழிவு




கொடைக்கானல்


ஆன்லைனில் கலக்கும் தமிழக ராப் இசை பாடகி... கொடைக்கானல் பாதரச கழிவு பிரச்சனையை முன்வைத்து பிரசாரம்
Sofia Ashraf's song "Kodaikanal won't"



சமூக சீர்கேடுகளைப் பற்றிய பாடல் வரிகளுடன் சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் பாடிய ராப் இசை அமெரிக்கா வரை பரவி பல லட்சம் ரசிகர்களைத் தேடித் தந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ராப் இசை பாடகி நிக்கி மினாஜ். இவருக்கு டுவிட்டரில் 2 கோடி ரசிகர்கள் உள்ளனர். 
இவரது அனகோண்டா என்ற வீடியோ ஆல்பத்தின் இசையை அடிப்படையாக கொண்டு சென்னையை சேர்ந்த ராப் இசை பாடகியான சோபியா அஷ்ரப் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.





இதனை பார்த்த கிராமி விருது வென்றவரான நிக்கி மினாஜ் கடந்த சனிக்கிழமை கட்டுரை ஒன்றுடன் சோபியாவின் வீடியோவை இணைத்து மீண்டும் டுவிட் செய்துள்ளார். 
அதில் மினாஜ் தனது பாராட்டுதலை சோபியாவுக்கு தெரிவித்துள்ளார். 
இந்த வீடியோ யூடியூப்பில் வெளியான 3 நாட்களில் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அதன்பின் ரெடிட் போன்ற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டுள்ளன. 
இதற்கு முன்பு பல்லாயிரம் பேரை பலிகொண்ட போபால் வாயு கசிவு சம்பவத்தை கொண்டு டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை தாக்கி ராப் பாடல் ஒன்றை சோபியா அஷ்ரப் பாடியுள்ளார். தற்பொழுது வெளியாகியுள்ள இந்த வீடியோ பாடலில் சோபியா புதிய வரிகளை கொண்டு எழுதியுள்ளார். 
கொடைக்கானலில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்றை சாடும் வகையில் வரிகள் எழுதப்பட்டுள்ளன. தனது பணியாளர்கள் மற்றும் மண், நீரை முறையாக சுத்தம் செய்யாத அந்த நிறுவனத்தை சாடியுள்ளதுடன் தனது பொறுப்பில் இருந்து அந்நிறுவனம் தவறியுள்ளதையும் எச்சரிக்கையுடன் சுட்டி காட்டியுள்ளார் சோபியா. 
அந்த வீடியோவில், விஷத் தன்மை கொண்ட பாதரச ஆலை மூடப்பட்டு கடந்த 14 வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் கால்வாய் ஒன்று உள்ளது. தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் கிராமத்தினர் பின்தொடர அந்த கால்வாயை சுற்றி அந்த பகுதியில் அஷ்ரப் முன்னோக்கி செல்வது போன்று வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஜட்கா என்ற அரசு சாரா அமைப்பொன்றின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த பாடல் 3 நிமிடம் ஓடுகிறது. சோபியா அஷ்ரப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைமைப்பில் சில சினிமா பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign the petition asking for Unilever to clean up the mercury poisoning in Kodaikanal: http://www.jhatkaa.org/unilever/.

Written by Chennai-born rapper Sofia Ashraf and set to Nicki Minaj's “Anaconda,” the video takes an undisguised jab at Unilever for its failure to clean up mercury contamination or compensate workers affected by its thermometer factory in Kodaikanal.





திங்கள், 3 ஆகஸ்ட், 2015

Maalaimalar ePaper 03-AUG 2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  3-AUG-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

Maalaimalar ePaper 02-AUG 2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  02-AUG-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

சனி, 1 ஆகஸ்ட், 2015

Maalaimalar ePaper 01-AUG-2015 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-AUG-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !